ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ஏற்பட்ட நட்டம் 
தமிழ்நாடு

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

DIN


சென்னை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு காரணமாக  தெற்கு ரயில்வேயில் நடைபெற்று வரும் மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் தாமதமாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம், 2019- 20ஆம் நிதியாண்டில் ரூ.3,202 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், 2020- 21ஆம் நிதியாண்டில் 1,407 கோடி வருவாய் கிட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இழப்பு, நிச்சயம் ரயில்வே திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

2019-20ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் மூலம் ரூ.2,014.52 கோடியை ஈட்டியுள்ளது. ஆனால் இது 2020 - 21ல் ரூ.476.83 கோடியாக இருந்தது. 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை சென்னை மண்டலத்தில் சராசரியாக 50 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆனால் இது 2020 - 21ல் 7.6 கோடியாகக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT