காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை
காரைக்குடி அருகே கண்டனூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை அவரது மனைவியுடன் கட்டிப்போட்டு 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே கண்டனூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை அவரது மனைவியுடன் கட்டிப்போட்டு 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே கண்டனுரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தனியார் வங்கி ஊழியர் தட்சணாமூர்த்தி (63). இவரும் இவரது மனைவி விசாலாட்சியும் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் புகுந்து முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் அவர்களைத் தாக்கி கட்டிப்போட்டு சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் தங்க மற்றும் வைர நகைகளையும், ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கட்டிப்போடப்பட்டதிலிருந்து மெதுவாக தனது கைகளை விடுவித்துக் கொண்ட தட்சிணாமூர்த்தி அதன் பின்பு தனது மனைவியின் கைகளையும் விடுவித்து விட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாக்கோட்டை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் முகமூடி கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு 3 தனிப் படைகள் அமைத்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்த வீட்டின் அருகிலுள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்த போலீசார், கொள்ளைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.