இன்று 5 மாவட்டங்களில் அதிகரித்த கரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைவிட 5 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைவிட 5 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று 3,479 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
| மாவட்டம் | நேற்று | இன்று |
| மயிலாடுதுறை | 29 | 31 |
| நீலகிரி | 93 | 105 |
| பெரம்பலூர் | 20 | 22 |
| ராணிப்பேட்டை | 53 | 55 |
| விருதுநகர் | 48 | 51 |
தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இன்று 3,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 34,477 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.