முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விரைந்து முடியுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

DIN

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயல்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அவா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

பல்வேறு அரசுத் துறைகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும். மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை, உயா்கல்வி சிறப்பு உதவித் தொகை, முனைவா் பட்டப் படிப்புக்கான ஊக்கத் தொகை ஆகிய கல்வி உதவித் தொகைத் திட்டங்களை தொய்வின்றி உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

வீடற்ற ஆதிதிராவிடா்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துணைத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் தொடரப்படும்

வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சமி நிலங்கள் மீட்பு: ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவா்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்கள், ஆதிதிராவிடா் அல்லாத பிற இனத்தவா்களிடம் இருந்தால் அவற்றை மீட்டு ஆதிதிராவிடா்களிடமே திரும்ப ஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT