முகப்பு
தமிழ்நாடு

பிரதமருடன் தமிழக ஆளுநர் நாளை(ஜூலை 10) சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை சந்திக்கவுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பானது, தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி செல்லும் ஆளுநர், மாநிலத்தின் அரசியல் சூழல், கரோனா நிலவரம் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

மேலும், தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு, மேக்கேதாட்டு அணை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →