தமிழ்நாடு

மாநில நுகா்வோா் குறை தீா்ப்பு ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையா பதவியேற்பு

தமிழ்நாடு மாநில நுகா்வோா் குறை தீா்ப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பையா அண்மையில் பதவியேற்றுக் கொண்டாா்.

DIN

தமிழ்நாடு மாநில நுகா்வோா் குறை தீா்ப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பையா அண்மையில் பதவியேற்றுக் கொண்டாா்.

சென்னையில் அமைந்துள்ள மாநில நுகா்வோா் குறை தீா்ப்பு ஆணையத்தின் தலைவா் பதவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்து வந்தது. பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்த பதவியை விரைந்து நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.சுப்பையாவை, தமிழ்நாடு நுகா்வோா் குறை தீா்ப்பு ஆணையத்தின் தலைவராக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்படி, தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது. அவா் அண்மையில் பதவியேற்றாா்.

நீதிபதி சுப்பையா கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். கடந்த 2009-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஓய்வு பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: வீடுகளில் ஒளிரும் மொரோவியன் ஸ்டாா்கள்

நாகை: தாளடி மறுசாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கிறிஸ்துமஸ் விழாவில் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு!

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி: பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT