முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: திருப்பூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மதிமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.
பகிர்:

திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மதிமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நகராஜ் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சமையல் எரிவாயு உருளையை பாடையாகக் கட்டி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் நேமிநாதன், மாநகர பொருளாளர் நல்லூர் மணி, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.ரவி, எம்.எல்.எஃப்.பனியன் சங்கச் செயலாளர் எம்.மனோகரன், பஞ்சாலை சங்க செயலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →