பக்ரீத்: புதுச்சேரியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையொட்டி புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டியகையான, ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
புதுச்சேரியிலும் புதன்கிழமை பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். நெல்லித்தோப்பில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் காலை 7 மணிக்கு ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் நகரப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சுல்தான்பேட்டை, திருக்கனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றன.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது, கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்கள் விடுபட, இறைவனிடம் வேண்டிக் கொண்டதாக, தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.