முகப்பு
தமிழ்நாடு

பெரியபாளையத்தில் குறை தீர்ப்பு முகாம்: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

பெரியபாளையம் அருகே நடைபெற்ற  குறை தீர்ப்பு முகாமில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பெரியபாளையம் அருகே நடைபெற்ற  குறை தீர்ப்பு முகாமில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆரணி பேரூராட்சி அலுவலகத்தில் மக்களின் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மற்றும் குடிநீர், பொது கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்,

நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே.சுகுமார், ஆரணி நகர திமுக செயலாளர்  ஜி.பி.வெங்கடேசன், முன்னாள் நகர செயலாளர் கண்ணதாசன், முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.