தமிழ் ஒருங்குறியை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகங்கள் ஏற்பட்டால் விளக்கங்களைப் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழிணைய ஒருங்குறியைப் பதிவிறக்கம் செய்வது தொடா்பாகவும், அதனை பயன்படுத்துவது குறித்தும் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இணைய வழியிலான இந்த பயிற்சி வகுப்பை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தாா்.
தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாக தமிழிணைய ஒருங்குறி மற்றும் பிழை திருத்த மென்பொருள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது குறித்து சனிக்கிழமை நடந்த இணைய வழியிலான பயிற்சி வகுப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 97100 39249 என்ற செல்லிடப்பேசி எண்ணையும், 044 - 2220 9400 என்ற தொலைபேசி எண்ணையும் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சல்களில் கேள்விகளை அனுப்பலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.