தமிழ்நாடு

காவிரியாறு தென்னிந்தியாவின் பொதுச் சொத்து : தமீமுன் அன்சாரி

DIN

கூத்தாநல்லூர்: காவிரியாறு தென்னிந்தியாவின் பொதுச் சொத்து என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான மு.தமீமுன் அன்சாரி எனத் தெரிவித்தார். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கடந்த 7 ஆண்டில், பாஜகவின் மத்திய அரசின் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விடும் விதத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ரூ.25 லட்சம் கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. கரோனா தொற்றுக்குப் பின், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விலையேற்றம் மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின்  மறைமுகமான விலை உயர்வுக்கு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெரும் காரணமாகும். இந்த விலையேற்றத்தால் அதிக அளவில் ஆதாயம் அடைந்துள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். காவிரியாறு தென்னந்தியாவின் பொது உரிமைச் சொத்து .அது எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது இல்லை. 

காவிரி ஆணையம் செயலற்றதாக உள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும். மேகதாது விஷயத்தில், மத்திய அரசு ரெட்டை வேடம் போடுகிறது. மேகதாது அணை கட்டுவதை உடனே நிறுத்தப்பட வேண்டும். நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

ஏழை, எளிய, கிராமப் புறத்தைச் சேர்ந்த அனைவரும் மருத்துவம் படிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் நிச்சயமாக, தமிழக மக்களின் நலனுக்காக டெல்லி போய் இருக்க மாட்டார்கள். போன் ஒட்டுக் கேட்கப்படும் பழக்கம், ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார்.

பேட்டியின் போது, மாநில துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், திருவாருர் மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT