வைகை அணையிலிருந்து ஜூன் 4-ல் தண்ணீர் திறப்பு
ஜூன் 4ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் 4ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில், முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு 4.6.2021 முதல் 120 நாள்களுக்கு வைகை அணையிலிருந்து 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.