தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது: மு.க. ஸ்டாலின்

DIN


சேலம்: தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டிருக்கும் தண்ணீர், கடைமடை வரை செல்வதை  உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 நீர்நிலைகளை  துர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிரியில் தடையின்றி தண்ணீரை பெற, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே தமிழக அரசின்  நோக்கம். இதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி உணவுத் துறையில் தமிழகம் சாதனை படைக்கும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறப்பதில் உறுதியாக உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஜூன் 17-ஆம் தேதி நேரம் கேட்டுள்ளோம். கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT