சாலைகளில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு: டிஜிபி திரிபாதி உத்தரவு
சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடுசாலைகளில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு: டிஜிபி திரிபாதி உத்தரவு
சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் வழிநெடுக காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும், சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் வருகையின்போது சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜி, ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.