தமிழ்நாடு

துறையூர்: மளிகை தொகுப்புடன் ரூ.2ஆயிரம் நிவாரணம் வழங்கும் நிகழ்வு தொடங்கியது

DIN

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் கரோனா 2வது தவணை நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ செ. ஸ்டாலின் குமார் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

துறையூர் நகரில் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள நியாயவிலைக் கடை மற்றும் ஒன்றியத்தில் நாகலாபுரம், கொல்லப்பட்டி, வீரமச்சான்பட்டி நாகம நாயக்கன்பட்டி, கங்காணிப்பட்டியில் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தருமன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றிய குழு தலைவர்  சரண்யா, துறையூர் திமுக ஒன்றிய செயலர் அண்ணாதுரை, நகர செயலர் மெடிக்கல் ந. முரளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நியாய விலைக் கடை பணியாளர்கள்  குடும்ப அட்டைதாரர்களுக்கு   வழங்கிய டோக்கன் வரிசை படி அரசின் கரோனா  நிவாரண பொருட்கள் தொகுப்பும் நிதியும் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT