முகப்பு
தமிழ்நாடு

பேளூர் அரசு கரோனா‌ மையத்திற்கு வெந்நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

சேலம் மாவட்டம் பேளூர் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சார்பில்,  சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர் வழங்கும் இயந்திரம் வியாழக்கிழமை  வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பேளூர் அரசு கரோனா மையத்திற்கு, நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர் வழங்கும்  இயந்திரம் வழங்கிய தன்னார்வலர்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் பேளூர் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சார்பில்,  சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர் வழங்கும் இயந்திரம் வியாழக்கிழமை  வழங்கப்பட்டது.

வாழப்பாடி அருகே பேளூரில் செயல்பட்டு வரும் கரோனா நலவாழ்வு சிகிச்சை மையத்தில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வெந்நீர் வழங்குவதற்கு, வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக, சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர் வழங்கும் இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார் மன்னன், செயலாளர் ஜவஹர் ஆகியோர் பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலத்திடம் வழங்கினர்.

இந்நிகழ்வில், துளி அறக்கட்டளை ஆசிரியர் இராஜசேகரன், சாய்விருக்ஷா அறக்கட்டளை கு. கலைஞர் புகழ், வாசவி சங்க நிர்வாகி சாய்ராம், வட்டார சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் செல்வபாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக,பேளூர் வட்டார மருந்தாளுனர் முருக பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.