முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் திறந்ததை எதிர்த்து ராணிப்பேட்டையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே மாநில வன்னியர் சங்கச் செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் அவரது வீட்டு முன்பு டாஸ்மாக் கடை திறந்ததை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் உத்தரவின்படி ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே மாநில வன்னியர் சங்கச் செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் அவரது வீட்டு முன்பு டாஸ்மாக் கடை திறந்ததை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கரோனா காலத்தில் மதுக்கடைகளை திறந்ததை கண்டித்தும், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கருப்புகொடி ஏந்தியும், மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சரவணன், சமூக நீதி பேரவை மாநில துணைத் தலைவர் ஜானகிராமன், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், எஸ்.எல்.எஸ்.மூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர்கள் கிரிகுமரன், சிவபிரகாஷம், நகரத் தலைவர் கஜேந்திரன், நகரச் செயலாளர் பழனிவேல், மாநில ஊடகப்பிரிவு கவியரசு ஆகியோர் கலந்துகொண்டு பாதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.