முகப்பு
தமிழ்நாடு

கூடுதல் தளர்வுகள்: தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த கூட்டத்தில் மருத்துவக் குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.