தமிழ்நாடு

விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

DIN

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு இலவச மடிக்கணினி வழங்கியது.

இந்நிலையில், 2017-18ஆம் ஆண்டு விடுபட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, விடுபட்ட மாணவர்களுக்கு தருவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய நீதிபதி, மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது. ஆகையால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT