தமிழ்நாடு

கருப்பு பூஞ்சைக்கு விரைந்து செயல்பட்டால் நல்ல பலன்: வல்லுநர் குழு

DIN


சென்னை: கருப்பு பூஞ்சை  நோயால் பாதித்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்தால் விரைவில் நலமடையலாம் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தடுப்பு சிறப்பு பணிக்குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தைத்து, தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தடுப்புப் பணிகள் குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 148 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் பலியாவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இறப்பு குறைந்ததற்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கருப்பு பூஞ்சை  பாதிப்பு சீக்கிரமே கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வுதான் காரணம். அதுபோல, கருப்பு பூஞ்சை பாதித்தவர்களுக்கு பல்வேறு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இணைந்து  குழுவாக செயல்படுகிறோம். அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு சரியான மருந்து கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில்தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை  மாவட்டங்களில் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவாகியுள்ளது. அதே வேளையில், சென்னைக்கு மிக அருகே இருக்கும் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்பட 10 மாவட்டங்களில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT