முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் நாளைக்குள் தொகுதிப் பங்கீடு: காங்.

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
வீரப்பமொய்லி
பகிர்:

திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பமொய்லி, திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று அல்லது நாளை தொகுதி பங்கீடு இறுதியாகும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →