முகப்பு
தமிழ்நாடு

கடலில் மிதந்துவந்த சாராயத்தைக் குடித்த மேலும் ஒரு மீனவர் மரணம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால்  கடலில் மிதந்த கேனில் இருந்த சாராயத்தைக் குடித்த மேலும் ஒரு மீனவர் மரணம் அடைந்தார். 

Updated On : 7 மார்ச், 2021 at 2:23 PM
சிகிச்சை பெற்று வரும் வினோத் 
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மிதந்த கேனில் இருந்த சாராயத்தை குடித்த மீனவர் ஒருவர் இன்று காலையில்  உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு மீனவர் முற்பகலில் உயிரிழந்தார்.

கோடியக்கரை கடற்கரையில் இருந்து மார்ச் 1 ஆம் தேதி கடலுக்குள் சென்ற படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு மிதந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த சாராயத்தை சிலர் குடித்ததாகக் கூறப்படுகிறது,  இதில் மூவர் மயக்கமடைந்த நிலையில், மற்ற மீனவர்கள் படகுடன் கோடியக்கரை வந்தடைந்தனர். இதில், தங்கச்சிமடம் அந்தோணி (38) உயிரிழந்தது இன்று காலை தெரிய வந்தது.

நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆரோக்ய புரோஸிஸ் (40) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இதனிடையே, வேதாரண்யம் மருத்துவமனையில் மீனவர் வினோத் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.