கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது உறுதி; மேலும் 2 தொகுதிகள்? 
தமிழ்நாடு

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது உறுதி; மேலும் 2 தொகுதிகள்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூரில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூரில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அண்ணா அறிவாலயத்தில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகின்றன என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்கியுள்ளனர். நாங்கள் திமுகவிடம் கேட்ட 3 தோகுதிகளில் கடையநல்லூர் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஆம்பூரா? அல்லது வாணியம்பாடியா? என்பதும் சிதம்பரமா? அல்லது பாபநாசமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.

தமிழகத்தில் கடையநல்லூர், திருவாடானை, பாபநாசம் ஆகிய மூன்று தொகுதிகளைக் கேட்டிருந்தோம். அவ்வாறு இல்லாவிட்டால், சிதம்பரம் அல்லது சென்னையில் உள்ள ஒரு தொகுதியை கோரினோம். நாங்கள் கேட்டதில் கடையநல்லூர் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT