சாலைமறியலில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர் 
தமிழ்நாடு

வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி: அதிமுகவினர் சாலை மறியல்

வேட்பாளர்கள் நியமனத்தால் அதிருப்தி அடைந்த அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

பூந்தமல்லி தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதால், அதிருப்தி அடைந்த அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டை சாலையின் சிக்னல் அருகே அதிமுகவினர் திரண்டு மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கும்மிடிப்பூண்டி, விருதாச்சலம் தொகுதிகளிலும் பாமக வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆலங்குடி, பல்லடம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலுள்ள செய்யூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றக்கோரி ஏராளமான அதிமுக தொண்டர்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளரை மாற்றக் கோரி கைகளில் பதாகைகளை ஏந்தி ஏராளமான அதிமுகவினர் சாலைகளில் குவிந்ததால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT