தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதல்வர்

DIN

சென்னையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சென்னை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமிக்கு கோவேக்ஸின் முதல்கட்ட கரோனா தடுப்பூசி  போடப்பட்டது.  அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

பின்னர் மருத்துவர்களை சந்தித்து கரோனா தடுப்பு மருந்து போடப்படுவது குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ''60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசு சார்பில் இலவசமாக 2,682 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை 11.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை சார்பில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT