6-வது முறையாக திருச்செந்தூரில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டி
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆறாவது முறையாக களமிறங்கவுள்ளார்.
உடன்குடி: திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆறாவது முறையாக களமிறங்கவுள்ளார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக உடன்குடி ஓன்றியம் தண்டுபத்தைச் சேர்ந்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2001 இம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுக அமைச்சரவையில் கால்நடை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஏடிகேஜெயசீலனை தோற்கடித்தார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனைத் தோற்கடித்தார். 2011 இம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் பி.ஆர்.மனோகரனைத் தோற்கடித்தார்.
2016 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட சமக தலைவர் நடிகர் சரத்குமாரை சுமார் 25000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.தற்போது இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு. உடன்குடி அருகே தண்டுபத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி நாடார் - பசுங்கிளி அம்மாளின் மகனாக 1952 இம் இண்டு இவர் பிறந்தார். 68 வயதாகும் இவருக்கு மதுரையில் பாத்திர உற்பத்தி மற்றும் வியாபாரம் உள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படித்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு ஜெயகாந்தி என்ற மனைவியும், அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் என மூன்று மகன்கள் உள்ளனர்.