முகப்பு
தமிழ்நாடு

எழுத்தாளர் இமையத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
கோப்புப் படம்.
பகிர்:

சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமையம் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் முதல் நாவலான 'கோவேறு கழுதைகள்' ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 

இதுவரை 50-க்கும் அதிகமான நூல்களைத் தமிழில் அவர்  எழுதியுள்ளார். இவருடைய செடல் நாவல் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. 1964-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இலக்கியத்துறையில் இமையம் என்றழைக்கப்படும் இவர், முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்.

இந்த நிலையில் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் இமையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், எளிய மக்களின் வாழ்வியலைத் தனது எழுத்துகளால் அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் இமையத்தின் 'செல்லாத பணம்' புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.  

கொள்கை சார்ந்த பயணத்துடனான அவரது படைப்புகள் மென்மேலும் பல விருதுகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →