சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த  சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் கெடிலா தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  
தமிழ்நாடு

சங்ககிரி தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சங்ககிரி வருகை: தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையத்தால் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவினப் பார்வையாளர் சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து

DIN


சங்ககிரி: இந்திய தேர்தல் ஆணையத்தால் சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவினப் பார்வையாளர் சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவினபார்வையாளர் ஸ்ரீதர் கெடிலா சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன், உதவி செலவின பார்வையாளர் டி.சேகர் ஆகியோர்களிடம் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்புகுழுவினர்கள் பட்டியலை பார்வையிட்டு வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை எவ்வாறு இனங்கள் வகையாக பிரித்து மேற்கொள்வது குறித்து விளக்கிக் கூறினார். பின்னர் பல்வேறு ஆலோசனைகளை அலுவலர்களுக்கு வழங்கினார். 

சங்ககிரி உதவி தேர்தல் அலுவலர் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஆ.செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மிதிவண்டி வழங்கினாா்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, நவாரோ!

டிசிஎஸ் நிகர லாபம் 14% சரிவு!

கேரளத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்! மத்திய அரசைக் கண்டித்து பினராயி விஜயன் போராட்டம்

SCROLL FOR NEXT