தமிழகத்தில் மேலும் 836 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 836 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,60,562 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதிகபட்சமாக சென்னையில் 317 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,42,862 பேர் குணமடைந்துள்ளனர். 12,551 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 5,149 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.