ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 
தமிழ்நாடு

ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடவிருக்கும் நிலையில், 60 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.

DIN


சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடவிருக்கும் நிலையில், 60 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.

அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்து களம் காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில், முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

கடந்த 1996-ல் ஒட்டப்பிடாரத்தில் தனித்துப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT