தமிழ்நாடு

ஓமலூர்: மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் திறந்ததால் பரபரப்பு

DIN

ஓமலூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மூடப்பட்ட அண்ணா சிலையை திமுகவினர் மீண்டும் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. திமுகவினரால் அமைக்கப்பட்ட இந்த அண்ணா சிலை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காலமாக துணியை கொண்டு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் இன்று மனு தாக்கல் செய்தார். இதனையொட்டி கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் மற்றும் காந்தி சிலைக்கு வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் சிலர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மூடப்பட்டிருந்த அண்ணா சிலையை திறந்து மாலை அணிவித்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT