புதுச்சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 489 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஓரணியாகவும் போட்டியிடுகிறது. இதுதவிர, தே.மு.தி.க., பா.மக., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் போட்டி களத்தில் உள்ளன.
இதனால் அங்கு பலமுனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்தது. இதில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள், சுயேச்சைகள் சார்பில் 489 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (மாா்ச் 20) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மாா்ச் 22-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை வேட்பாளா்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.