முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவன் வேட்பு மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட   வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி. கதிரவன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட   வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி. கதிரவன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளர் பி. வி. கதிரவன் உசிலம்பட்டி மதுரை சாலையில் போக்குவரத்து பணிமனையில் இருந்து  திமுக, பார்வர்டு பிளாக் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை, மதிமுக, ஆதித்தமிழர் பேரவை, முஸ்லிம் லீக், மனிதநேய கட்சி கட்சி, நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். 

தொடர்ந்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வேட்பாளர் மற்றும் இரண்டு  நபர்கள் அனுமதி வழங்கப்பட்டது. உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில்  முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் இ.சுகந்திரம் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →