திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை(மார்ச் 25) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை(மார்ச் 25) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி நிகழாண்டு திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்ஸவ பெரிய கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை ஒருநாள்(மார்ச் 25) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.