போடி: த.மா.கா. பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை
போடியில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையின் தேர்தல் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி: போடியில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையின் தேர்தல் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி எஸ்.எஸ்.புரத்தில் வசிப்பவர் அங்குவேல் (55). இவர் தமிழ் மாநில காங்கிரஸ் நகர நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் வியாழக் கிழமை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வந்தனர். வீடு பூட்டியிருந்தது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு அங்கு வேல் வந்தார்.
அவரைத் தொடர்ந்து வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில் அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்தனர்.
அவர்கள் அங்குவேல் வீட்டிற்குள் சென்று சோதனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கூடியதால் போடி நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.