முகப்பு
தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக - காங்கிரஸ் கூட்டணி: ஜெ.பி. நட்டா
தமிழ்நாடு

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக - காங்கிரஸ் கூட்டணி: ஜெ.பி. நட்டா

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக -  காங்கிரஸ் கூட்டணி என்றார் பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா.

தமிழ்நாடு

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக - காங்கிரஸ் கூட்டணி: ஜெ.பி. நட்டா

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக -  காங்கிரஸ் கூட்டணி என்றார் பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக - காங்கிரஸ் கூட்டணி: ஜெ.பி. நட்டா
பகிர்:

தஞ்சாவூர்: தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக -  காங்கிரஸ் கூட்டணி என்றார் பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி. நட்டா.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி எஸ். வெங்கடேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை மாலை பிரசாரம் செய்த அவர் பேசியது:

 திமுக-காங்கிரஸ் கூட்டணி மன்னர்களின் ஆட்சி போல  குடும்ப ஆட்சியை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கொல்கத்தா முதல் மும்பை வரையிலும் பரந்த முடியாட்சியை நடத்தி வந்தது.

 திமுகவும் காங்கிரசும் 2ஜி அலைக்கற்றை ஊழலை செய்தது. இந்த வரிசையில் இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என ஊழல் அரசியலை வழிவழியாகச் செய்து வருகின்றன.

 காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது. தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்தார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதன் முலம், அவ் விளையாட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

 இதேபோல திமுக - காங்கிரஸ் ஆட்சியில் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 700க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடி பிரதமரான பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது நிறுத்தப்பட்டிருக்கிறது. 

மேலும் தமிழ் கடவுளான முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் அவமதித்த போது, அதற்கு திமுக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு முருக பக்தர்களை மதித்து, முருகப் பெருமானை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.

 காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 17,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ. 9.10 லட்சம் கோடியை மோடி அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ. 2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 மத்திய அரசில் தமிழர்களான நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும், ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மேலும் தமிழகத்தில் 12 பொலிவுறு நகரங்கள், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு ஒப்புதல்களை அளித்துள்ளன.

அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் உள்ளூர் கைவினைப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு, உள்ளிட்டவற்றுக்கு தேசிய, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.

 அதிமுக இந்த மாநிலத்தில் மிகப் பெரிய கட்சியாக இருக்கிறது. அதேபோல தேசிய பண்புகளுடன் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வகையில் அதிமுகவும் பாஜகவும் தேசிய கட்சிகளாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதால் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசியும் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

 தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள படி, தாழ்த்தப்பட்ட மக்களின் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்கள் சாமியார்கள், சாதுக்கள் உள்ளிட்டோர் குழு மூலம் புனரமைக்கப்படும். ஜல் சக்தி துறை மூலம் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் பிடி தளங்கள் மேம்படுத்தப்படும்.

 தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வைத்த வறுமை மற்றும் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள் தொடர அதிமுக - பாஜக கூட்டணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் நட்டா.
 

முழு கட்டுரையைப் படிக்க →