முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
திருப்பரங்குன்றம் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்
பகிர்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார்.

நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் செவ்வாய்க்கிழமை காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு  உறவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு, அவரை அமமுக வேட்பாளர்கள் மகேந்திரன், டேவிட் அண்ணாதுரை, ஆதிநாராயணன் உள்ளிட்டோர் சந்தித்து ஆசி பெற்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →