முகப்பு
தமிழ்நாடு

கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஆர். மகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்: மநீம விளக்கம்

கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஆர். மகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஆர். மகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலைய பொதுச்செயலர் சந்தோஷ் பாவு விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைத் தலைவரிடம் கொடுத்தனர். 
தேர்தல் கால செயல்பாடுகளை காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது.
கட்சியின் துணைத்தலைவராக இருந்த ஆர். மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments