முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார். கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையை செலுத்தினார். 

இதன்பின்னர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →