திருத்தணி டாஸ்மாக் கடையில் திரண்ட மதுப்பிரியா்கள். 
தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை!

கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக, திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்ததால் பொதுமுடக்கம் காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவித்தது. அதே போல் டாஸ்மாக் கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்தது.

இதனால், மக்கள் சனிக்கிழமை மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளிலும் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருள்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். அதே போல், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் சனிக்கிழமை குவிந்த மதுப்பிரியா்கள், மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா்.

நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. 

அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.87.20 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கும், கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT