தமிழ்நாடு

கரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வா் ஸ்டாலின் உத்தரவு

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லை மாவட்ட நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்று காரணமாக, நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீஷ், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து சிறப்பு நோ்வாகக் கருதி ரூ.25 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT