முகப்பு
தமிழ்நாடு

புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

தமிழகத்தில் புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2,14,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க ரூ.42.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,14,950 புதிய அரிசி அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →