முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரியிலிருந்து முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பிரதான சாலைகள் வெறிச்சோடின 

சேலம் மாவட்டம் சங்ககிரி நகரில் முழு பொது முடக்கத்தையொட்டி பல்வேறு பிரதான சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
சங்ககிரி அருகே உள்ள ஈரோடு}பவானி பிரதான சாலைகள் வாகனங்கள் ஏதும் செல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
பகிர்:

சேலம் மாவட்டம் சங்ககிரி நகரில் முழு பொது முடக்கத்தையொட்டி பல்வேறு பிரதான சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியது. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை வரை முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சங்ககிரியில் காலை 10 மணிக்கு மேல் சங்ககிரியிலிருந்து சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி, பவானி, ஈரோடு செல்லும் சாலைகள் அதிகளவில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி உள்ளன. இதில் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள், மினி ஆட்டோக்கள் சென்று வருகின்றன.

தேவையில்லாமல் நகருக்குள் வருபவர்களை  கட்டுப்படுத்துவதற்காக சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய எடப்பாடி சாலையில் ஒரு புறச்சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருவதை அறிந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் குறுக்கு வழிகளில் சென்று வருகின்றனர்.

சாலைகளில் வாகனங்கள் அதிகளவில் செல்லாததால் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்ற. இந்த வாகனங்களை கவனிக்காமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக சென்று வருவதால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேகமாக செல்லும் இரு வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →