வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு : முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடுவைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு : முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 645 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு 66 அடியாக உயர்ந்ததால் வைகையாற்றின் கரையோரங்களில் வசிக்கும் பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68.50 அடியாக உயர்ந்தால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியாக உயர்ந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் அணைத்தும் வைகையாற்றில் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.