முகப்பு
தமிழ்நாடு

'கரோனா பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டவில்லை'

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:


கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்துக் காட்டவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தவறில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கரோனா குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கரோனாவால் இறந்தவர் உடல்களை அடக்கம் செய்யும் முன் உறவினர்கள் பார்க்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு இன்னும் 2 நாள்களுக்கு மட்டுமே உள்ளதாகவும்,

சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக புள்ளி விவரங்களோடு தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →