முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 112.28 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 111.68 அடியிலிருந்து 112.28 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 112.28 அடியாக உயர்வு
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 111.68 அடியிலிருந்து 112.28 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 10,858 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 10,904 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 81.69 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.