தமிழ்நாடு

சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு , நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.  வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.

இன்றும், நாளையும் அரபிக் கடலில் தென்கிழக்கு, கேரளம், கர்நாடகம் கரையோரம், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். 

மழையளவு: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அதிகபட்சமாக 13 செ.மீ, அம்பாசமுத்திரத்தில் 9 செ.மீ, பாளையங்கோட்டியில் 8 செ,மீ, நாங்குநேரியில் 7 செ.மீ, குமரி மாவட்டத்தின் பெருஞ்சா அணையில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT