கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் இந்த மாதம் 26, 27, 28 -ஆகிய தேதிகளில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிக்க | யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் 3 வெண்கலம்
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள கழகம் சார்பில் 14, 16, 18, 20 வயதுக்குள்பட்ட தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறப்பு
இந்தப் போட்டியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தொடங்கிவைத்தார். கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், காவேரிபட்டிணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று தகுதி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.