தமிழ்நாடு

முன்னெச்சரிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது: செந்தில் பாலாஜி

DIN

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மின்சாரம் நிறுத்திவைக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுகின்றன. 

இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மின்சாரம் நிறுத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார். 

மழை நீர் வடிந்த பிறகு சீரான முறையில் மீண்டும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 0.27% மட்டுமே  மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மழைநீர் வடிந்த பிறகு அந்தப் பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT