தமிழ்நாடு

கும்பகோணம் அருகே தொடர் மழையால் சுவர் இடிந்து குழந்தை பலி

DIN

 
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக புதன்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயது குழந்தை உயிரிழந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்தது. ஆனால் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 195 மி.மீ., ஈச்சன்விடுதியில் 172 மி.மீ., தஞ்சாவூரில் 161 மி.மீ., பட்டுக்கோட்டையில் 153 மி.மீ., மதுக்கூரில் 145 மி.மீ. என பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 113.7 மி.மீ. மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 33 குடிசை வீடுகள்,  ஓடுகள் வேயப்பட்ட 11 வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் சேதமடைந்தன.

இடிந்து விழுந்த அனன்யா வீட்டு சுவர்.

இந்நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கௌதம் வீட்டில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடுபாடுகளில் கௌதம் (28), இவரது மனைவி மற்றும் குழந்தை அனன்யா (4) சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் அனன்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கனகராஜ் (37), சுந்தரி (32) காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT